இரட்டை கோபுர தாக்குதல் இன்றுடன் 16 வருடங்கள்..

2001 ஆம் ஆண்டு செப்டெம்பர் 11ஆம் திகதி தீவிரவாதிகளால் அமெரிக்க இரட்டை கோபுரத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு இன்றுடன் 16 வருடங்கள் நிறைவடைகின்றது.

4 விமானங்கள் கடத்தப்பட்டு இத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இரு விமானங்கள் அமெரிக்காவின், நியூயோர்க் நகரிலுள்ள உலக வர்த்தக மையம் என அழைக்கப்படும் இரட்டைக் கோபுரங்கள் மீது மோதியது.

இதன் விளைவாக உடனடியாக நூற்றுக்கணக்கானவர்கள் பலியாகியுள்ளதுடன் பல்லாயிரக்கணக்கானோர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டெம்பர் 11ஆம் திகதி  காலை 8.45 மணியளவில் அமெரிக்க விமானநிலையத்திற்கு சொந்தமான போயிங் 767 ரக விமானம் ஒன்று சுமார் 20 ஆயிரம் கலன்களைக் கொண்ட எரிபொருளுடன் இரட்டைக் கோபுரத்தில் மோதியது.

அதனை அடுத்து, சுமார் 18 நிமிடங்களின் பின்னர் இரண்டாவது போயிங் 767 விமானம் இரட்டைக் கோபுரங்களின் தெற்கு கோபுரத்தின் தாக்கி அதனையும் வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.