போருக்கு பின்னர் மீள் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த இரணைமடு குளம் வான் கதவுகளை சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொள்ளும் வகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(07) கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
ஜனாதிபதியுடன் மேலும் சில பாராளுமன்ற உறுப்பினர்களும் கிளிநொச்சிக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால், நாட்டில் அரசியல் குழப்பம் காரணமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நிகழ்வில் கலந்து கொள்வது சந்தேகம் எனத் தொிவிக்கப்படுகிறது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் இரணைமடு குளத்தின் புனரமைப்பு பணிகள் நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.