இரணைமடு நீர்த்தேக்கத்தில் மூழ்கி ஒருவர் பலி..

கிளிநொச்சி – இரணைமடு நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி நேற்று(09) மாலை உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி பொலிசார் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணம் சாவக்கச்சேரி, மீசாலை பிரதேசத்தினைக் கொண்ட 21 வயதுடையே என்.திலக்ஷன் என்பவரே இவ்வாறு இறந்துள்ளார் என கிளிநொச்சி பொலிசார் தெரிவித்துள்ளனர்.

திருத்தப் பணிகளின் பின்னர் நீரினால் நிரம்பிய இரணைமடு வான் கதவுகள் கடந்த 07ம் திகதி திறக்கப்பட்டதோடு, நேற்றைய தினம் (09) வான் கதவுகள் 08 திறந்துவிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.