இரண்டாவது விசேட நீதிமன்றத்தின் முதலாவது வழக்கு விசாரணை இன்று(22)

(FASTNEWS | COLOMBO) – அரசினால் அமைக்கப்பட்ட மூன்று நீதியரசர்கள் அடங்கிய இரண்டாவது விஷேட மேல் நீதிமன்றத்தின் முதலாவது வழக்கு விசாரணை இன்று (22) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அரச வைத்தியர் ஒருவர் 75,000 ரூபாய் லஞ்சமாக பெற்றுக்கொண்டதாக கூறப்படும் வழக்கே இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

குறித்த விஷேட மேல் நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் 14 ஆம் திகதி நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சரினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.