அலவ்வ, கபுவரல பகுதியில் நேற்று(13) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 25 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கதருவெலயில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்று எதிர் திசையில் வந்த பேருந்து ஒன்றுடன் ஒன்று மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் இரண்டு பேருந்துகளிலும் பயணித்த 26 பேர் அலவ்வ மற்றும் குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அலவ்வ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 60 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் அலவ்வ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்