இரத்தினபுரி – கஹவத்த பகுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற வாகன விபத்தில் 21 பேர் காயமடைந்துள்ளதாக கஹவத்த காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கேகாலை நோக்கி சென்ற தனியார் பேரூந்தொன்றும், கொடகவெலயில் இருந்து கேகாலைக்கு பயணித்த பேரூந்தும் மோதுண்டதில் குறித்த இந்த விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கஹவத்த மற்றும் இரத்தினபுரி மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, இதில் 04 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக கஹவத்த மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.