இரத்தினபுரி மாவட்டத்தின், அயகம, நிவித்திகல, கொலன்ன, கலவான, கிரிஎல்ல, பெல்மடுளை மற்றும் கஹாவத்தை போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகள் மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளில், மண்சரிவுகள் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளதாக, கட்டட மற்றும் ஆராய்ச்சி நிறுவகம், இன்று (21) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று காலை 5 மணிக்கு விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை, 24 மணித்தியாலத்துக்கு நீடிக்குமெனவும், அந்நிறுவகம் அறிவித்துள்ளது.
குறித்த இந்தப் பிரதேசங்களுக்கு, 100mm இற்கும் அதிகமான மழை பெய்யும் என்றும் அவ்வாறு பெய்யும் பட்சத்தில், மண்சரிவு ஏற்படக்கூடுமென்றும், குறித்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.