தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் நிலவி வந்த பாரிய வெள்ளநிலை மற்றும் மண்சரிவு அனர்த்தங்களினால் இரத்த வங்கிகள் சிலவற்றில் தட்டுப்பாடு நிலவுவதால் நாரஹேன்பிட்டியில் அமையப் பெற்றுள்ள பிரதான இரத்த வங்கி மற்றும் பிரதேச இரத்த வங்கிகளில் இரத்தங்களை சேகரிக்க நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார தேசிய இரத்த மையத்தின் ஆய்வாளர் பீ.ஏ.உபாலி குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஊடகங்களுக்கு விடுத்துள்ள விசேட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
குறித்த அவசர நிலையில் இரத்த தானம் வழங்க விரும்புவோர் 55 வயதிற்கு குறையாது 50Kg இனையிலும் பார்க்க அதிக எடையினை கொண்ட, நோய்களால் பாதிக்கப்பட்டு மருந்துகளை உட்கொள்ளும், அதாவது சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் மற்றும் தோற்று நோய் உள்ளோர் தவிர்ந்த ஆரோக்கியமான ஆண்/பெண் இருபாலாரும் குறித்த இரத்த தானத்தில் பங்கேற்க முடியும்.
கொழும்பினை அண்மித்த பகுதிகளில் உள்ளோர் சிறு சிறு குழுக்களாக நாரஹேன்பிட்டி தேசிய இரத்த மைய நிலையத்தில் காலை 8.00 – மாலை 6.00 வரை இரத்த தானம் செய்ய வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏனையோர் இலங்கை முழுவதிலும் உள்ள இரத்த தான மையங்களில் தமது வசதிக்கேற்ப அண்மையிலுள்ள நிலையத்தில் இரத்த தானங்களை மேற்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக தகவல்களுக்கு நாரஹேன்பிட்டி தேசிய இரத்த மையத்தின் குறித்த 011-5332154 தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.