(FASTNEWS| COLOMBO) – இரத்த பரிசோதனைக்காக 4200 ரூபா செல்லும் எனவும் அந்த பணத்தை செலுத்த முடியாதவர்களுக்கு தான் பணம் வழங்க தயாராக உள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர்கள அனைவரும் இரத்த பரிசோதனை செய்து தன்னை சுத்தமானவர் என நிரூபிக்குமாறும் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று(27) சிறிகொத்தாவில் நடைபெற்ற கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
நாட்டில் உள்ள அனைத்து பொதுமக்களிடமும் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். இந்த பரிசோதனை அதுவும் நகம், தலை முடி ,இரத்தம் மற்றும் சிறுநீர் என்பவற்றை பரிசோதனை செய்து தான் சரியென்பதை நிரூபிக்க சொல்லுங்கள்.
போதைப்பொருள் இரத்தத்தில் கலந்து இருக்கிறதா என்பதை பார்க்க 4200 ரூபாதான் செல்லும். அந்த தொகையை வேண்டும் என்றால் நான் செலுத்துகிறேன். இந்த போராட்டத்தை நான் முன்னோக்கி கொண்டு செல்வது இந்த நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு தான் எனவும் தெரிவித்துள்ளார்.