இரத்மலானை – பொருபன பகுதியிலிருந்து மோட்டார் குண்டு ஒன்று இன்று(27) காலை 7 மணியளவில் கல்கிஸ்ஸ காவல் துறையினரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் சென்று கொண்டிருந்த நபர் ஒருவரே மோட்டார் குண்டினை அவதானித்துள்ளதாகவும், அவர் காவல் துறையினரின் அவசர தொலைபேசி இலகத்திற்கு வழங்கிய தகவலுக்கு அமையவே காவல் துறையினர் செயற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த குண்டு இரு பாகங்களாக உடைபட்டு கிடந்ததாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளதோடு, குறித்த இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.