இரவில் தேங்காய் எண்ணெயால் முகத்தை மசாஜ் செய்தால் ஏற்படும் மாற்றம்…

தேங்காய் எண்ணெயை தினமும் இரவில் தூங்கும் முன் சருமத்தை மசாஜ் செய்தால் பல்வேறு சரும பிரச்சினைகளைத் தடுக்கலாம்.

மேக்கப் ரிமூவர்:
வாட்டர் புரூப் மஸ்காரா மற்றும் லிப்ஸ்டிக்கை நீக்குவது என்பது கடினமான ஒன்றாக இருக்கும்.
ஆனால் இதை தேங்காய் எண்ணெய் எளிதாக்கும். அதற்கு இரவில் படுக்கும் முன் காட்டனில் சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி, உதடு, கண்கள் மற்றும் தேவையான இடங்களைத் துடைத்து எடுங்கள். இதனால் எளிதில் மேக்கப் நீங்கும்.

இயற்கை ஹைலைட்டர்:
பெரும்பாலான ஹைலைட்டிங் பொருட்கள், அதனுள்ளே தேங்காய் எண்ணெயை கொண்டுள்ளது. இந்த எண்ணெய் சருமத்தில் மாயத்தை ஏற்படுத்தும். எனவே பொலிவான சருமம் வேண்டுமானால், அன்றாடம் தேங்காய் எண்ணெயை சருமத்தில் தடவி மசாஜ் செய்யுங்கள்.

பருக்கள் நீங்கும்:
தேங்காய் எண்ணெயில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள், முகப்பருக்களைக் கட்டுப்படுத்த உதவும். இதில் உள்ள பேட்டி அமிலங்கள் பருக்களை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும் மற்றும் எண்ணெய் பசை உற்பத்தியை அதிகரிக்காமல் தடுக்கும்.

சன் ஸ்க்ரீன்:
தினமும் இரவில் படுக்கும் முன் தேங்காய் எண்ணெயை சருமத்திற்கு பயன்படுத்துவதோடு, வெளியே செல்லும் முன் தேய்க்கும் போது வெயிலால் ஏற்படும் தாக்கத்தை தடுக்கலாம். அதிலும் 30 நிமிடத்திற்கும் மேலாக வெயிலில் சுற்றுபவராக இருப்பின், தேங்காய் எண்ணெயே மிகச்சிறந்த சன் ஸ்க்ரீன்.

ஆன்டி-ஏஜின்:
தேங்காய் எண்ணெயை சருமத்திற்கு ஒருவர் பயன்படுத்தி வந்தால், சருமத்தில் கொலாஜன் உற்பத்தி மேம்பட்டு, சருமம் இளமையுடன் காட்சியளிக்கும்.