இரவு 8 மணிக்குள் ஆஜராகுமாறு ஜோன்ஸ்டனுக்கு நீதிமன்றம் காலக்கெடு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இன்று இரவு 8 மணிக்கு முன்பு ஒரு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. தாம் கைது செய்வதை தடுக்குமாறு கோரி, நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம், இந்த உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது.
இன்று இரவு 8 மணிக்கு முன்பு இவர் நீதிமன்றத்தில் ஆஜ ரானால்,இவருக்கு விதிக்கப்பட்டிருந்த பிடி ஆணை செல்லுபடியற்றதாகும் என்றும் மேல்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.