இராஜாங்க அமைச்சர்கள் பலர் பதவி விலகத் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அமைச்சரவை அமைச்சர்கள் இராஜாங்க அமைச்சர்களுக்கு பொறுப்புக்களை ஒப்படைக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதனால் இராஜாங்க அமைச்சர்கள் எதிர்வரும் வாரங்களில் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.
அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் மேலும் தெரியவந்துள்ளது.