அனர்த்த முகாமைத்துவ திணைக்களத்தின் வாகனத்தை 2011 – 2014 வரை சட்டவிரோதமாக பயன்படுத்தி, அரசுக்கு ஒரு கோடி 70 இலட்சம் ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸிக்கு மருத்துவ சிகிச்சைகளுக்காக இந்தியாவின் சென்னை நகருக்கு செல்ல கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய அனுமதி வழங்கியுள்ளார்.
எதிர்வரும் 25ஆம் திகதி முதல் 30ஆம் திகதிவரை சிகிச்சைகளுக்காக இந்தியா செல்லவுள்ளதால் எதிர்வரும் 28ஆம் திகதிக்கு நீதிமன்றில் ஆஜராக முடியாமல் உள்ளதாக மனு ஒன்றின் மூலம் அமைச்சர் பௌஸி தனது சட்டத்தரணி ஊடாக இன்று நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார்.
குறித்த வழக்கு எதிர்வரும் 31ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது