(FASTNEWS | COLOMBO) – இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பாக தனக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று(16) பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.
அத்துடன், எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரையும், மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவது தமக்குரிய விடயமல்ல எனவும் அது குறித்த நடைமுறைகளை பொலிஸார் உள்ளிட்ட பொருத்தமான துறையனர் மேற்கொள்வார்கள் எனவும் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.
கொக்கேய்ன் போதைப் பொருளை பயன்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளதாகத் தகவல் வெளியிட்டுள்ள இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் எனத் தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.