இராஜின் வீடியோ – ஜனாதிபதியை அவமதிக்கிறது — இராஜுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்…?

(FASTGOSSIP| COLOMBO)- பிரபல பாடகரான இராஜ் வீரரத்னவினால் வெளியிடப்பட்டுள்ள ‘SURATHA’ எனும் தலைப்பிலான காணொளியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினை அவமதிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

YOUTUBE சமூக வலைதளத்தில் குறித்த வீடியோ பதிவேற்றப்பட்டுள்ளதோடு, அதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களும் பகிரப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி செயலக அதிகாரியொருவர் கருத்துத் தெரிவிக்கையில்’

“குறித்த இராஜின் வீடியோவானது ஜனாதிபதியினை அவமதிக்கும் விதத்தில் அமைந்துள்ளதாகவும், நாட்டின் தலைவர் ஒருவரை அவ்வாறு அவமதிப்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.. இந்நாட்களில் ஜனாதிபதியின் போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கை தொடர்பிலும் இராஜ் விமர்சித்திருந்தார்..” என்றும் அவர் கூறியிருந்தார்.

குறித்த வீடியோ