பிரபல சிங்களப் பாடகர் இராஜ் வீரரத்ன இனால் வெளியிடப்பட்ட மற்றுமொரு அரைநிர்வாண இசை வீடியோவான ‘வஸ்ஸானே ஹீனே’ [‘Wassane Heene’] எனும் பெயரில் வெளியாகிய புதிய வீடியோ குறித்து நாம் வாசகர்களுக்கு அறிவித்திருந்தோம்.
தற்போது நாம் கூறப்போவது யாரும் அறிந்திருக்க முடியாதொரு விடயம் குறித்தேயாகும்..
அதாவது, நேற்று(26) காலை இராஜ் உள்ளிட்ட அவரது இசைக்குழுமம் பயணம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.
குறித்த பயணமானது வணக்கத்துக்குரிய கலபொட அத்தே ஞானசார தேரரை சந்திக்கவே ஆகும்.
எமக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இராஜ் தனது மற்றுமோர் புதிய இசை வீடியோ குறித்து ஞானசார தேரருடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டிருக்கிறார்.
குறித்த புதிய இசை வீடியோ ஆனது விரைவில் வெளியாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.