புகையிரத திணைக்களத்தின் வேலைகளுக்கு இராணுவத்தினரை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே தொழிற்சங்கங்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த சங்கத்தின் ஏற்பாட்டாளர் எஸ்.பி.விதானக இது குறித்து தெரிவிக்கையில்;
“..குறித்த இந்நடவடிக்கை ரயில்வே தொழிற்சங்கங்களின் செயற்பாடுகளை இராணுவத்தினரை பயன்படுத்தி அடக்கு முறைப்படுத்தும் நோக்கில் அரசினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானமாகும். அவ்வாறு எம்மை அரசு அடக்குமுறைக்கு உட்படுத்தினால், ரயிலினை இருந்த இடத்தினை விட்டும் நகர்த்த முடியாது செய்ய ரயில்வே தொழிற்சங்கம் எதிர்வரும் தினங்களில் நடவடிக்கை எடுக்கும்..” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.