இராணுவத்தின் ஐந்து பிரிகேடியர்களுக்கு மேஜர் ஜெனரல் பதவி

இராணுவத்தின் ஐந்து பிரிகேடியர்கள் மேஜர் ஜெனரல்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வாவின் பரிந்துரைக்கு அமைய குறித்த  பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

பிரிகேடியாகளாக கடயைமாற்றிய நிசாங்க ரணவக்க (கஜபா படைபிரிவு), அனுர பெரேரா (சிங்கப் படைபிரிவு), அருன ஜயசேகர ( கெமுனு படைப்பிரிவு), தம்மிக்க பனன்கொல்ல (பொறியியல் படைப்பிரிவு) மற்றும் அஜித் விஜேசிங்க (சமிக்ஞை படைப் பிரிவு) ஆகியோரே இவ்வாறு மேஜர் ஜெனரல்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

கடந்த 9ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.