இராணுவத்திற்கு இன்னும் நான்கு வீரர்கள் இணைவு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை கிரிக்கெட் அணியின் வீரரும், முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவருமான தினேஷ் சந்திமால் இலங்கை இராணுவத்தின், இலங்கை தன்னார்வப் படையணியின் அதிகாரியாக சேவையாற்றவுள்ளதாக இராணுவத்தின் ஊடகப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் சுமித் அதபத்து தெரிவித்திருந்தார்.

இதேவேளை, இலங்கை இராணுவத்தின் அதிகாரம் பெற்ற அதிகாரியாக நியமிக்கப்படவுள்ளதாகவும், இலங்கை இராணுவ கிரிக்கெட் அணியையும் இவர் பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தேசிய அணியில் விளையாடும் மேலும் நான்கு வீரர்கள் எதிர்வரும் வாரங்களில் இராணுவத்தில் இணையவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.