(FASTNEWS|COLOMBO) – ஊடகவியலாளர் உபாலி தென்னகோன் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இராணுவ புலனாய்வு அதிகாரியான கோப்ரல் லலித் ராஜபக்ஷவை எதிர்வரும் 19 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்
அவர் இன்றைய தினம் கம்பஹா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
————————————————————————————————(update)
இராணுவப் புலனாய்வு பிரிவின் முன்னாள் கோப்ரல் கைது
(FASTNEWS|COLOMBO) – செய்தி ஆசிரியர் உபாலி தென்னகோன் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில், இராணுவப் புலனாய்வு பிரிவின் முன்னாள் கோப்ரல் லலித் ராஜபக்ச குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹங்வெல்ல பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவரது கைவிரல் அடையாளம் தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளர் உபாலி தென்னகோன் பயணித்த வாகனத்திலிருந்து பெறப்பட்ட கைவிரல் அடையாளத்துடன் ஒத்திசைந்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.