இரத்மலானை, சக்கிந்தாராம வீதியில் இன்று(25) காலை 7.20 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் இராணுவ அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டியில் வந்த இனந்தெரியாதோர், குறித்த இராணுவ அதிகாரியின் வீட்டிற்கு அருகில் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
காயமடைந்துள்ள இராணுவ அதிகாரி, களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.