ஆவா குழுக்கள் போன்றவற்றை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொள்வார்கள் இராணுவம் தேவையில்லை எனவும் இராணுவத்தின் உதவியை பெற்றால் அது சர்வதேச சமூகத்திற்கு பிழையான செய்தியை தெரிவிப்பதாக அமையும் எனவும் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
இராணுவத்திற்கு அதிக அதிகாரங்களை வழங்கினால் ஆவா குழுவை கட்டுப்படுத்துவதற்கு உதவ தயார் என இராணுவதளபதி தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்து வந்துள்ள நிலையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
எனினும் பாதாள உலக குழுக்களை கட்டுப்படுத்தவும் போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும் படையினரை பயன்படுத்துவது குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் ஆராயவுள்ளதாக அமைச்சர் மேலும் கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.