இராணுவ சிப்பாயினால் 12 வயது சிறுவன் பாலியல் வல்லுனர்வுக்கு

தொடர்ந்து பேயாட்டம் காட்டும் காம வெறியர்களின் லீலையில், நவகத்தேகம பகுதியில் 12 வயது சிறுவனொருவனை பாலியல் ரீதியாக  துன்புறுத்திய தகவலுக்கு அமைய  இராணுவ சிப்பாய் ஒருவரைக் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நவகத்தேகம, கொன்கஸ்வெல பகுதியில் வைத்தே இந்த பாலியல் துன்புறுத்தல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் தகவல் தெரிகையில், கைதுசெய்யப்பட்ட  இராணுவ சிப்பாய் யாழ்ப்பாணத்தை சேர்ந்த முகாம் ஒன்றில் விஜயபாகு படைப்பிரிவில் கடமையாற்றுபவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாயை புத்தளம் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, சிறுவனை ஆனமடுவ வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நவகத்தேகம பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.