(FASTNEWS-COLOMBO) யுத்தம் நிறைவடைந்து இராணுவ வெற்றியின் 10 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளதை முன்னிட்டு இராணுவ நினைவு வருடத்தினை பிரகடனப்படுத்துவதற்கு ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டில் இராணுவ நினைவு வருடத்தினை பிரகடனப்படுத்தி பல்வேறு வேலைத்திட்டங்களை நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதியின் வழிகாட்டலில் ரணவிரு சேவா அதிகார சபையினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இராணுவ நினைவு வருடத்தினை பிரகடனப்படுத்தி அதனுடன் இணைந்ததாக முன்னெடுக்கப்பட்டுள்ள இராணுவ கொடி இயக்கத்தின் முதலாவது கொடி ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவர் ஜம்மிக்க லியனகேவினால் நேற்று(05) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு அணிவிக்கப்பட்டது.