இராணுவ பொது மன்னிப்பு காலம் நீடிப்பு…

(FASTNEWS|COLOMBO) விடுமுறையின்றி நீண்ட காலமாக சேவைக்கு சமூகமளிக்காத இராணுவத்தினர், இராணுவத்திலிருந்து சட்டரீதியாக விளக்குவதற்காக வழங்கப்பட்டிருந்த பொதுமன்னிப்பு காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இராணுவத்தில் சேவையாற்றிய வேளை தமக்குறிய தலைமையக சேவைக்கு சமூகமளிக்க தவறிய படையினருக்கு 17ஆம் திகதி மே 2019 அன்று மாலை 06.00 மணி வரையிலான கால பொது மன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளதாக இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது.

முன்னர் பொது மன்னிப்பு காலமானது ஏப்ரல் 22ஆம் திகதி முதல் மே 10ஆம் திகதி வரை வழங்கப்பட்டிருந்த நிலையில் இந்தக் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.