இராணுவ வீரரொருவர் சுடப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது…

கல்கிஸ்ஸ பிரதேசத்தில் இராணுவ வீரரொருவர் சுடப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபரொருவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரத்மலானை – சக்கிந்தாராம பிரதேசத்தில் இராணுவ வீரரொருவர் கடந்த ஜூன் மாதம் 25ம் திகதி காலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.