(FASTNEWS|COLOMBO) இலங்கை பொறியியலாளர்கள் இருவரினால் தயாரிக்கப்பட்ட ‘இராவணா வன்’ செயற்கைக் கோள் இன்று(18) அதிகாலை வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது.
நாசா நிறுவனத்திற்கு சொந்தமான வேர்ஜினியாவிலுள்ள மத்திய அட்லாண்டிக் பகுதியில் வைத்து இந்த செயற்கைக் கோள் ஏவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
தரிந்து தயாரத்ன மற்றும் துலானி சாமிகா விதானகே ஆகிய மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பட்டதாரிகள் இருவரே, இந்த ‘இராவணா வன்’ செயற்கைக் கோளைத் தயாரித்துள்ளனர்.
ஆயிரம் கனசென்றிமீற்றர் நீளமுடைய இராவணா – 1 செய்மதியானது, 1.1 கிலோ கிராம் நிறைகொண்டதாகும்.
இன்று(18) அதிகாலை 2.16 மணியளவில் ஏவப்பட்ட செயற்கைக் கோளானது, நாளை(19) மாலை 6.30 மணியளவில் விண்வௌியை அடையவுள்ளது.