இரா.சம்பந்தன் இந்தியா பயணம்

(FASTNEWS | COLOMBO) – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்தியத் தலைநகர் புதுடில்லிக்கு ஒரு வாரப் பயணமாக நேற்று(12) புறப்பட்டுச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் ஜனாதிபதித் தேர்தலுக்கான ஆயத்தங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டை இன்னமும் வெளிப்படுத்தவில்லை.

இவ்வாறானதொரு நிலையில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், இந்தியத் தலைநகர் புதுடில்லிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். முக்கிய விடயங்கள் தொடர்பில் கூட்டமைப்பு இந்தியாவுடன் ஆலோசனை நடத்தியே கடந்த காலங்களில் முடிவுகளை மேற்கொண்டிருந்தது.

எனினும், அவர் தனது மருத்துவத் தேவைக்காகவே இந்தியாவுக்குச் சென்றுள்ளார் என கூட்டமைப்பு வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.