ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளரையும் கொலை செய்ய சதி செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் உரிய விசாரணை நடாத்தாமல் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமாகிய பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியிருந்தார்.
மேலும், விசாரணையின் முடிவில் ஒன்றில் குற்றவாளியைக் கைது செய்ய வேண்டும் அல்லது பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியவரைக் கைது செய்ய வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.