இரு பெண்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இருவருக்கு 20 வருட சிறை…

இரு பெண்களை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவத்தின் குற்றவாளிகள் இருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(07) சிறைத் தண்டனையை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

குறித்த இந்த சம்பவத்தில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள இரண்டு காவற்துறை அதிகாரிகளுக்கும் தலா 20 வருடமும் 6 மாத கால சிறைத் தண்டனையை விதித்து தீர்ப்பளித்துள்ளது.