சிரிய படைகளின் முற்றுகைக்குள் சிக்கி உள்ள கோதா நகருக்குள் ஐக்கிய நாடுகள் சபையின் மேற்பார்வையில் மனித நேய உதவிகள் சென்றடைந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
2014 ஆண்டு முதல் நகரத்திற்குள் மனிதநேய உதவிகள் குறித்த நகருக்குள் நுழைய முதல் முறையாக அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அடிப்படை உணவுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரங்கள் உள்ளிட்ட பல்வேறு மனிதநேய உதவிகளை சுமந்த 39 லாரிகள் கொண்ட தொடரணி கடந்த வியாழக்கிழமை கோதா நகரை வந்தடைந்ததாக சிரியாவில் ஐ.நா. பணிக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.
கடும் சோதனைகளின் பின் சென்றடைந்துள்ள மேற்படி உதவிகள் சிரிய அரசபடைகள் மேற்கொண்டு வரும் கடும் தாக்குதல்களின் காரணமாக இதுவரையில் விநியோகிப்படவில்லை.
நகரில் 8 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் சிக்கியுள்ள போதிலும் 3 ஆயிரம் மக்களுக்கே இந்த உதவிகள் போதுமாக உள்ளது, எனவே முற்றுகையை முழுமையாக அகற்றுவதே சிரியாவில் பொதுமக்கள் எதிர்நோக்கும் அவலங்களை போக்க சரியான தீர்வாக அமையும் என ஐ.நா. பணிக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.