ஹாங்காங் கிரிக்கெட் அணியின் மூன்று வீரர்களான நதீம் அகமது, இர்பான் அகமது (சகோதரர்கள்), ஹசீப் அம்ஜத் ஆகியோர் சூதாட்ட குற்றச்சாட்டில் ஈடுபட்டமை உறுதியாகியுள்ள நிலையில், குறித்த மூன்று வீரர்களையும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) இடைநிறுத்தம் செய்துள்ளது.
2015 ஆம் ஆண்டு உலக கிண்ண தகுதி சுற்றில் கனடா, ஸ்காட்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 3 பேரும் சூதாட்டத்தில் ஈடுபட்டனர்.
இர்பான், நதீம் ஆகியோர் 2016 ஆம் ஆண்டு இருபதுக்கு இருபது உலக கிண்ணத்திலும் சூதாட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். இதில் நதீம் அகமது சமீபத்தில் நடந்த ஆசிய கிண்ண கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடியவர் ஆவார்.
இதன்படி, குறித்த வீரர்கள் மூவரும் 2 வார காலத்துக்கு இடைநிறுத்தம் செய்யப்பட்டு உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.