இறக்குமதி செய்யப்படும் அரிசி Kg ஒன்றை 76 ரூபாய்க்கு அதிகமாக சந்தையில் விற்பனை செய்ய முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தனியார் வர்த்தகர்களுக்கும் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும் தேவையான மாதிரி அரிசி விலையை அதிகரிக்க முடி யாது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள வறட்சி நிலைமை தொடர்பில் மக்கள் பிரச்சினைகளை கண்டறிவதற்கு நியமிக்கப்ப ட்டுள்ள ஜனாதிபதி செயலணியுடன் நேற்று(20) மாலை இடம்பெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.
அரிசி இறக்குமதியின் போது நுகர்வோருக்கு பொருத்தமான அரிசி இறக்குமதி செய்யப்படுகின்றதா? என்பதை உறுதி செய்யுமாறும் ஜனாதிபதி செயலணியிடம் கேட்டுள்ளார்.
அரச களஞ்சியசாலைகளிலிருந்து அரிசி ஆலைகளுக்கு வழங்கப்பட்ட நெல், உரிய முறையில் அரிசியாக சந்தைப்படுத்த ப்படுகின்றதா என்பது குறித்து தனக்கு அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்