இறக்குமதி மற்றும் உள்நாட்டு அரிசி வகைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலைகள் நேற்று(17) நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, இறக்குமதி செய்யப்பட்ட நாட்டரிசி 1Kg-70 ரூபாவாகவும், உள்நாட்டு நாட்டரிசி 1Kg-80 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட பச்சை அரிசி 1Kg-70 ரூபாவாகவும், உள்நாட்டு பச்சை அரிசி 1Kg-78 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், இறக்குமதி செய்யப்பட்ட சம்பா அரிசி 1Kg-80 ரூபாவாகவும், உள்நாட்டு சம்பா அரிசி 1Kg-90 ரூபாவாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், அரிசி விற்பனை தொடர்பாக ஏதேனும் மோசடிகள் இடம்பெறுமாயின், 1977 என்ற உடனடி தொடர்பு இலக்கத்திற்கு தொடர்புகொண்டு முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியும் என கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ரிசாத் பதியுதீன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.