காணாமல் போனவர்கள் தொடர்பான காரியாலயம் அமைக்கும் சட்ட மூலத்துக்கு சபாநாயகரால் இறுதி ஒப்பமிட்டால் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரவுள்ளதாக கூட்டு எதிர்க் கட்சி அறிவித்துள்ளது.
ஒழுங்கு முறைப்படி முன்வைக்கப்படாத சட்ட மூலத்துக்கு கையொப்பமிட்டால், அது அரசியல் யாப்பு சட்டத்தை மீறும் செயலாக கருதப்படும் என கூட்டு எதிர்க் கட்சியின் உறுப்பினர் உதய கம்மம்பில மேலும் கூறியுள்ளார்.
காணாமல் போனவர்கள் தொடர்பான காரியாலயம் அமைக்கும் சட்ட மூலம் நிறைவேற்றப்பட்ட முறைமை தொடர்பில் சபாநாயகருக்கும் கூட்டு எதிர்க் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று(18) இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.