இறுதிச்சடங்கில் உயிர் பிழைத்த நபர்: உறவினர்கள் ஷாக்

மதுரை மாவட்டம் பெருமாள்பட்டியில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டவர், இறுதிசடங்கின் போது உயிர் பிழைத்துள்ளார்.
பாண்டித்துரை என்பவர் நெஞ்சு வலி காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள்‌ கூறியுள்ளனர்.
இறுதிச்சடங்கு நடைபெற்ற போது, உறவினர்கள், பாண்டித்துரையின் மார்பில் பலமாக அடித்து அழுதுள்ளனர். அப்போது, பெரு மூச்சு விட்ட பாண்டித்துரை உயிருடன் எழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.