பாகிஸ்தான் சுப்பர் லீக் இருபதுக்கு இருபது இறுதிப் போட்டியினை பாகிஸ்தான் லாகூர் நகரில் நடாத்த தீர்மானித்தது “பைத்தியம்” என பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
“பாகிஸ்தானுக்கு உலகிலுள்ள எந்த கிரிக்கெட் அணியும் வராமைக்கு காரணம் பாதுகாப்பு குறித்த பிரச்சினையே ஆகும்.போட்டியின் இறுதிப் போட்டியினை பாகிஸ்தானில் நடத்தினால் எந்தவொரு வீரரும் பங்கேற்காது, இது பைத்தியத்திலும் பெரும் பைத்தியமான முடிவு…” என இம்ரான் கான் கூறியுள்ளார்.
டுபாய் மற்றும் சாகா நகரங்களில் நடைபெற்ற பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியின் இறுதி போட்டி எதிர்வரும் 05, ஆம் திகது நடைபெறவுள்ள இடம் குறித்து இன்னும் தீர்மானமிக்கதோர் முடிவு இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
பாகிஸ்தானின் பிரபல அரசியல்வாதியாகவுள்ள 64 வயதுடைய இம்ரான் கான் டெஸ்ட் விக்கெட்கள் 362 உம் மற்றும் ஒருநாள் விக்கெட்கள் 176 உம் கைப்பற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.