இற்றைவரை உத்தியோகபூர்வ இல்லங்களை கையளிக்காத மு.பா.உறுப்பினர்கள்

இதுவரை தமக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை கையளிக்காத முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் அரச நிர்வாக அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.

கிட்டத்தட்ட 30 பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்னும் தங்களுக்கு வழங்கப்பட்ட இல்லங்களை மீள அளிக்கவில்லை எனவும், இது குறித்து அவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் அந்த அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

குறித்த கூற்றுக்கு பதிலளித்துள்ள சிலர் காலஅவகாசம் கோரியுள்ளதாகவும் வேறு சிலர் எந்த பதிலும் அளிக்கவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் எதிர்வரும் டிசம்பர் வரை இவர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாக அமைச்சு மேலும் கூறியுள்ளது.

இதேவேளை இவர்கள் இல்லங்களை மீள வழங்காததால் புதிய உறுப்பினர்களுக்கு தங்குமிட வசதிகளை பெற்றுக் கொடுப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சின் பேச்சாளர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.