இலக்காகும் இரட்டை சதம்.. கைகொடுக்கும் நட்புறவு: மனம் திறந்த முரளிவிஜய்

டெஸ்ட் போட்டிகளில் இரட்டை சதம் எடுப்பதை இலக்காக வைத்திருக்கிறேன் என்று இந்திய அணியின் தொடக்க வீரர் முரளிவிஜய் கூறியுள்ளார்.
வங்கலா தேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தவானுடன் ஜோடி சேர்ந்து அசத்திய தமிழக வீரர் முரளி விஜய் 150 ஓட்டங்களில் ஆட்டமிழ்ந்தார். இவர் ஏற்கனவே 139, 167, 153, 146, 144 ஓட்டங்களில் ஆட்டம் இழந்திருக்கிறார்.

இந்நிலையில் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டிய நேரம் இது. இரட்டை சதம் அடிப்பதே எனது அடுத்த இலக்கு என்று அவர் தெரிவித்துள்ளார்.