இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக நியமிக்கப்பட உள்ள அலய்னா பி. டெப்லிடஸ்…

இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக அலய்னா பி. டெப்லிடஸ்ஸின் பெயரை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று(24) வௌ்ளை மாளிகையில் வைத்து முன்மொழிந்துள்ளார்.

தூதுவர் சேவையில் சிரேஷ்ட அதிகாரியான அலய்னா பி. டெப்லிடஸ் தற்போது நேபாளத்திற்கான அமெரிக்க தூதுவராக கடமையாற்றி வருகின்றார்.

இந்நிலையில், அவரை இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக நியமிக்க டொனால்ட் ட்ரம்பினால் முன்மொழியப்பட்ட பரிந்துரைக்கான அனுமதியை பெற வௌ்ளை மாளிகையின் ஊடாக குறித்த பரிந்துரை அமெரிக்க செனட் சபையிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த அனுமதி கிடைக்கபெற்ற பிறகு தற்போதைய இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கேஷப்பிற்கு பதிலாக அலய்னா பி. டெப்லிடஸ் நியமிக்கப்படவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2015 ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக அதுல் கேஷப் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.