இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக அலாய்னா பி டெப்லிட்ஸ் நியமனம்…

இலங்கை மற்றும் மாலைத் தீவுக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக அலாய்னா பி டெப்லிட்ஸ் ( Alaina B Teplitz) நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த மே மாதம் இந்த நியமனத்தை வழங்கியிருந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை அமெரிக்க செனட் சபையில் இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. .