இலங்கைக்கான மலேசிய உயர்ஸ்தானிகர் அன்சாருக்கு இலங்கை அரசு அழைப்பு…

மலேசியாவின் கோலாலம்புர் விமான நிலையத்தில் தாக்குதலுக்கு உள்ளாகிய இலங்கைக்கான மலேசிய உயர்ஸ்தானிகர் இப்றாஹீம் அன்சாரை இலங்கைக்கு அழைப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான அறிவித்தல் வெளிவிவகார அமைச்சினால் நேற்று(06) அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

அவர் மீது நடாத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக அவர் இலங்கைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டிள்ளது.

நாட்டுக்கு மீண்டும் அழைக்கப்படும் உயர்ஸ்தானிகரின் பதவி தொடர்பில் எந்தவித பிரச்சினையும் இல்லையெனவும் இத்தாக்குதல் தொடர்பில் மலேசிய அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் வரையில் அவரை அந்நாட்டுக்கு அனுப்பாதிருக்கவும் அமைச்சு தீர்மானித்துள்ளதாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.