இலங்கைக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள பயணத் தடைகளை நீக்குமாறும், மேற்குலக நாடுகளிடம் ஜனாதிபதி கோரிக்கை

(FASTNEWS | COLOMBO) – உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்குப் பின்னர் மோசமடைந்திருந்த பாதுகாப்பு நிலைமைகளில், 99% இயல்பு நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவசரகாலச் சட்டம் இன்னும் ஒரு மாதத்துக்குள் நீக்கப்படும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மேற்குலக நாடுகளின் தூதுவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய போது ஜனாதிபதி இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்;

உடனடி பாதுகாப்பு நிலைமைகளைக் கையாளுவதற்கே அவசரகாலச் சட்டத்தை பிறப்பிக்க வேண்டியிருந்தது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டனர் அல்லது கைது செய்யப்பட்டு விட்டனர். இந்நிலையில், இலங்கைக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள பயணத் தடைகளை நீக்குமாறும், மேற்குலக நாடுகளின் தூதுவர்களிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.