இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டி இன்று

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு -20 கிரிக்கட் போட்டி இன்று பிரிஸ்பேனில் இடம்பெறவுள்ளது.

அவுஸ்திரேலியா அணியின் அதிவேக பந்துவீச்சாளரான மிட்செல் ஸ்டார்க்கே, தனது சொந்த காரணங்களுக்காக இப்போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

இந்த இரண்டு அணிகளுக்கிடையே முன்னதாக இடம்பெற்ற முதலாவது போட்டியில் அவுஸ்திரேலியா அணி வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.