இலங்கைக்கு எதிரான 2–வது டெஸ்ட் – காயத்தால் வகாப் ரியாஸ் விலகல்

பாகிஸ்தான்– இலங்கை அணிகள் மோதும் 2–வது டெஸ்ட் போட்டி கொழும்பில் நேற்று தொடங்கியது. முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 138 ரன்னில் சுருண்டது. பின்னர் விளையாடிய இலங்கை ஒரு விக்கெட்டுக்கு 70 ரன் எடுத்து இருந்தது.

பாகிஸ்தான் பேட்டிங் போது அந்த அணியின் முதன்மை வேகப்பந்து வீச்சாளர் வகாப் ரியாஸ் கைவிரலில் காயம் அடைந்தார். இருந்த போதிலும் நேற்று அவர் பந்து வீசினார். அவரது காயத்தை பரிசோதித்ததில் விரலில் முறிவு ஏற்பட்டு உள்ளது தெரிந்தது.

இதையடுத்து அவர் 2–வது டெஸ்டில் இருந்து விலகி உள்ளார். 3–வது டெஸ்டிலும் அவர் இடம் பெறமாட்டார். இது பாகிஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவாகும். இன்று 2–வது நாள் ஆட்டம் நடக்கிறது. இலங்கை அணி நிதானமாக விளையாடி வருகிறது.