இலங்கைக்கு எவ்வித சுனாமி அச்சுறுத்தலும் இல்லை…

பசுபிக் கடலில் அமைந்துள்ள பிஜி மற்றும் டொன்கா தீவுகளுக்கு அருகில் ஏற்பட்டுள்ள 8.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால், இலங்கைக்கு எவ்வித சுனாமி அச்சுறுத்தலும் இல்லையென, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த தீவுகளின் கடற் கரையிலிருந்து, 200 மீற்றர், தொலைவிலும் 560 கிலோமீற்றர் கடல் ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள், அல்லது உயிரிழப்புகள் குறித்து இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.