இலங்கையில் பங்குதாரர் போல் இருந்து, இலங்கை முகம் கொடுக்கும் பிரச்சினைகளுக்கு ஆதரவு வழங்க ஆயத்தம் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் சிறப்பான ஜனநாயகத்தை கட்டியெழுப்புவதற்காக ஆதரவு வழங்குவது தங்கள் நோக்கம் என ஐரோப்பிய ஒன்றியம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த தேர்தலில் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக இலங்கைக்கு வருகை தந்த ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள், இந் நாட்டின் பல சிவில் அமைப்புகளிடம் பெறுமதியாக உபகரணங்கள் சிலவற்றை நேற்று கையளித்துள்ளனர்.
இதன் போது 108,000 ரூபாய் பெறுமதியான மடிக்கணினிகள், தொலைப்பேசிகள் போன்ற அலுவலக பொருட்களும் கையளிக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் தேர்தலின் போது ஐரோப்பிய ஒன்றியம் பல்வேறு வகையில் ஆதரவு வழங்கியதாக குறித்த சந்தர்ப்பத்தில் ஐரோப்பிய தேர்தல் ஒன்றிய பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அதன் ஒரு கட்டமாக வாக்காளர்களை பதிவு செய்வதற்கு 1.2 மில்லியன் யூரோ நிதி வழங்கியதாகவும் அத்துடன் அடுத்த கட்ட நடவடிக்கையாக சிவில் அமைப்புக்களுக்கு அலுவலக உபகரணங்கள் வழங்கியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
(riz)