வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்படும் அனைத்துப் பொதிகளும் பரிசோதனை செய்யப்படும் என தபால் மா அதிபர் ரோஹன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
இதற்கு மத்திய தபால் பரிமாற்றகத்தில் இரண்டு புதிய ஸ்கேன் இயந்திரங்களைப் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் மத்திய தபால் பரிமாற்றகத்தில் காணப்பட்ட பொதி ஒன்றிலிருந்து 100 இலட்சம் பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.