இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பிரித்தானிய பிரஜைகளுக்கு சிவப்பு எச்சரிக்கை..

இலங்கையில் நிலவும் அரசியல் சூழ்நிலையினை கருத்திற் கொண்டு இலங்கைக்கான சுற்றுப் பயணங்களை மேற்கொள்ளுமாறு பிரித்தானிய பிரஜைகளுக்கு அந்நாட்டு அரசினால் விசேட அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் சுற்றுப் பயணங்களை மேற்கொண்டிருக்கும் அல்லது மேற்கொள்ளவுள்ளோர் அரசியல் கூட்டங்கள்/எதிர்ப்புப் பேரணிகள் இடம்பெறும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறும் அந்நாட்டு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும், இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகள் தற்சமயம் நடந்து வருகின்ற வேலையில், போட்டிகளை பார்வையிட செல்வதிலும் அவதானம் செலுத்துமாறும் அந்நாட்டு அரசு தமது பிரஜைகளை கேட்டுக் கொண்டுள்ளது.